Episodes
ஒரு நாள் பள்ளி சென்று இல்லம் திரும்பினான் சிறுவன். வருகின்ற வழியில் காவியுடை அணிந்த சுவாமிகள் சிலர் வருவதைக் கண்டான். அப்போது மிகுந்த அன்புடன் அவர்களை வணங்கி, பணிவுடன் ‘சுவாமிகள் அனைவரும் எங்கள் இல்லத்துக்கு வந்து உணவு உண்டு விட்டு செல்ல வேண்டும்’ என்று வேண்டி நின்றான். அச்சுவாமிகள் அனைவரும் சிறுவனின் குணத்தைப் பாராட்டி, இல்லத்துக்கு வர இசைந்தனர்.
Published 04/10/22
பக்தியையும் பழந்தமிழையும் வளர்த்து வான்புகழ் கொண்ட சிறப்புக்குரியவர் சிவஞான சுவாமிகள் ஆவார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வளமிகு சிற்றூர் விக்கிரமசிங்கபுரம். அவ்வூரில் சிவனிடத்து நீங்கா அன்பு கொண்டு வாழ்ந்தவர்கள் ஆனந்தக்கூத்தர் மயிலம்மையார். இவ்விருவரும் செய்த தவத்தின் பயனால் இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அம்மகனுக்கு ‘முக்காளலிங்கர்’ என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தனர். முக்காளலிங்கருக்கு ஐந்து வயது நிரம்பியது. அவன் தந்தை அவனைப் பள்ளியில் சேர்த்தார்.
Published 03/30/22
சைவ சித்தாந்த சாத்திரங்கள் பற்றித் தமிழில் எழுந்த நூல்களைப் போன்றே வடமொழியிலும் சில நூல்கள் எழுந்துள்ளன. கி.பி 8 -12 நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டதான அட்டப்பிரகரணம் எனும் தொகுப்பிலுள்ள எட்டு நூல்களை அவ்வகையுள் குறிப்பிடலாம். அவை, தத்துவப் பிரகாசிகை தத்துவ சங்கிரகம் தத்துவத் திரய நிர்ணயம் இரத்தினத் திரயம் போக காரிகை நாத காரிகை மோட்ச காரிகை பரமோட்ச நிராச காரிகை என்பனவாகும்
Published 03/10/22
இந்தியாவில் இந்து சமயத்தின் பெரும்பாலான தத்துவப் பிரிவுகள் வேதங்களையும் அவற்றின் இறுதிப்பகுதியாகக் கொள்ளப்படும் உபநிடதங்களையும் அடிப்படையாகக் கொண்டிருக்க, சைவ சித்தாந்தம் வேதங்களையும், ஆகமங்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஏராளமான ஆகமங்கள் உள்ளன. இவற்றுள் சில சைவ சமயத்துக்கும், வேறுசில வைணவ சமயத்துக்கும், மற்றவை சாக்த சமயத்துக்கும் உரியவை. சைவ சித்தாந்தத்துக்கு அடிப்படையான சைவ ஆகமங்கள் 28 ஆகும். இவற்றுட் தலையாயவை காமிகாகமம், காரணாகமம் என்பன. சைவ சித்தாந்தத்தை விளக்கும் நூல்களில்...
Published 02/20/22
இரண்டாம் அதிகரணம் மேற்கோள் : இனி, ஒடுங்கின சங்காரத்தின் அல்லது உற்பத்தி இல்லை என்றது ஏது : இல்லதற்குத் தோற்றம் இன்மையின், உள்ளதற்குச் செய்வோர் இன்றிச் செய்வினை இன்மையின். உதாரணம் : இலயித்த தன்னில் இலயித்ததாம் மலத்தால் இலயித்தவாறு உளதா வேண்டும் - இலயித்தது அத்திதியில் என்னின் அழியாது அவையழிவது அத்திதியும் ஆதியுமாம் அங்கு 2 வித்துண்டாம் மூலம் முளைத்தவா தாரகமாம் அத்தன்தாள் நிற்றல் அவர்வினையால் - வித்தகமாம் வேட்டுவனாம் அப்புழுபோல் வேண்டுருவைத் தான் கொடுத்துக் கூட்டானே மண்போல் குளிர்ந்து...
Published 01/31/22
முதல் சூத்திரம் அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின் தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர் என்பது சூத்திரம். வார்த்திகப் பொழிப்பு கருத்துரை : என் நுதலிற்றோ எனின், சங்கார காரணனாய் உள்ள முதலையே முதலாக உடைத்து இவ்வுலகம் என்பது உணர்த்துதல் நுதலிற்று. உரைவகை : இதன் பொழிப்பு உரைத்துக் கொள்க. 1. முதல் அதிகரணம் மேற்கோள் : ஈண்டு, உளதாய் ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் உற்பத்தி திதி நாசம் உடைத்துஎன்றது. ஏது : தோற்றமும் ஈறும் உள்ளதின்பாலே...
Published 01/14/22
அவையடக்கம் தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார் எம்மை உடைமை எமை இகழார் - தம்மை உணரார் உணரார் உடங்குஇயைந்து தம்மில் புணராமை கேளாம் புறன்
Published 12/31/21
நூல் மங்கல வாழ்த்து கல்லால் நிழன்மலை வில்லார் அருளிய பொல்லார் இணைமலர் நல்லார் புனைவரே
Published 12/12/21
சிறப்புப் பாயிரம் நேரிசை ஆசிரியப்பா மலர்தலை உலகின் மாயிருள் துமியப் பலர்புகழ் ஞாயிறு படரின் அல்லதைக் காண்டல் செல்லாக் கண்போல் ஈண்டிய பெரும்பெயர்க் கடவுளிற் கண்டுகண் இருள்தீர்ந்து அருந்துயர்க் குரம்பையின் ஆன்மா நாடி மயர்வுஅற நந்தி முனிகணத்து அளித்த உயர்சிவ ஞான போதம் உரைத்தோன் பெண்ணைப் புனல்சூழ் வெண்ணெய்ச் சுவேதவனன் பொய்கண்டு அகன்ற மெய்கண்ட தேவன் பவநனி வன்பகை கடந்த தவரடி புனைந்த தலைமை யோனே.
Published 11/30/21
Translation: Oh my mind ! You thought falsely the things that gets associated due to birth are harmful, so except for renounced people sufferings won't leave. Don't forget. You went in the right path. In whose head holy water is flowing, that Lord of justice's (Lord Shiva) ArUr (we) will worship and get saved ( from sufferings). Don't get scared by developing desires.
Published 11/22/21
Among the three things of pathi, pachu, pAcham, like the pathi the pAcham of pachu is without origin. pAcham of pachu will not affect the pathi. If pathi approaches (the pachu) then the pAcham of pachu won't stay (with pachu). It is this concept of driving away the pAcham of pachus which surrendered to pathi, which is seen in many holy deeds of Lord Shiva like tripurasaMhAram. The three demons are like the three components of pAcham (ANavam, kanamam, mAyai). Lord Shiva, pathi, destroys them...
Published 11/04/21
Though for learned persons this may not seem a good introduction to shaiva sidhdhantha, this page is out of the wish to talk about that. This is similar to a kinder garden boy trying to explain the construction of a nuclear reactor. Still there will be persons who enjoy the efforts of a kid to act matured. In shaiva sidhdhantham God is called pathi, all the souls (creatures, all lives except pathi) which take birth and die are called pachu(pashu)s, the bondage is calledpAcham (pAsam). The...
Published 10/31/21
எவ்வெவ  கோட்படு பொருளும் அஞ்செழுத்தின்           அடக்கி அவற்றியல்பு காட்டி மெய்வகை அஞ்சவத்தையினும் நிற்குமுறை           ஓதுமுறை விளங்கத் தேற்றி அவ்வெழுத்தின் உள்ளீடும் அறிவித்துச்           சிவபோகத்து அழுத்தி நாயேன் செய்வினையும் கைக் கொண்ட வேலப்ப           தேசிகன்தாள் சென்னி சேர்ப்பாம் எனக் காஞ்சிபுராணத்துள் கூறியவாற்றால் இனிது விளங்கும். சிவஞானயோகிகள் ஜமதக்கினி முனிவருடைய புத்திரரும், அகத்திய மகா முனிவருடைய முதன்மாணாக்கரும், இடைச் சங்கப் புலவர் ஐம்பத்தொன்பதின்மருள் ஒருவருமாகிய...
Published 10/30/21
வணங்கிய முக்களா லிங்கர் ஞானதேசிகரிடத்தே சைவ சந்நியாசமும் சிவதீட்சையும் சிவஞானயோகிகள் என்னும் தீட்சாநாமமும் பெற்று மெய்கண்ட சாத்திரம் பண்டாரசாத்திரங்களைக் கேட்டருளினார். சிவஞானயோகிகள் அகத்திய மகா முனிவர் வரத்தால் அவதரித்தருளியவர் ஆகலின், எளிதிலே வடமொழிக் கடலும், தென்மொழிக் கடலும் முற்று ஒருங்கு உணர்ந்து மெய்யுணர்வின் முற்றுப் பேறு உடையராய் அமர்ந்தருளினார். வேலப்ப தேசிகர் சிவஞானயோகிகளுக்கு மெய் உபதேசம் செய்தருளிய ஞானாசாரியர் என்பது,
Published 10/09/21
பின்னர் ஆனந்தக் கூத்தர் புத்திரராகிய முக்களா லிங்கரோடு ஆதீன முனிவர்களிடத்தே போய் வணங்கியவழிச் சத்திநிபாதம் உடைய புத்திரர் பிறவிப் பெருந்துன்பக் கடலினின்றும் கரையேறக் கருதி, அம்முனிவர்களோடு தாம் செல்ல வேண்டும் என்னும் குறிப்பினைத் தந்தையாருக்கு உணர்த்த, அவர் புத்திரரைப் பிரியச் சிறிதும் மனமில்லாது இருந்தும் ஒருவாறு இசைந்து அவரை அவர்களோடு விடுத்து வீட்டுக்குத் திரும்பினார். தந்தையார் நீங்கிய பின்பு, முக்களாலிங்கர் ஆதீனத்து முனிவர்களோடு வழிக்கொண்டு மார்க்கங்களில் உள்ள சிவஸ்தலங்களைத் தரிசித்துக்...
Published 09/25/21
அருந்ததிஎன் அம்மை அடியவர்கட்கு என்றும் திருந்த அமுதளிக்கும் செல்வி -பொருந்தவே ஆனந்தக் கூத்தர் அகமகிழத் தொண்டு செயும் மானம் தவாத மயில்  என்னும் செய்யுளை இயற்றிச் சென்றருளினார்கள். அதன்பின்பு புறத்தே போயிருந்த ஆனந்தக் கூத்தர் வீட்டிற்கு வந்த போது நிகழ்ந்த அரிய செயல்களைக் கேள்வியுற்றுப் பேரின்பக் கடலிலே முழுகினார்.
Published 09/18/21
பள்ளிக்கூடத்தினின்றும் வந்த முக்களாலிங்கர் அம்முனிவர்களைச் சந்தித்துத் தரிசித்து வணங்கி,"சுவாமிகாள்! அடியேன் வீட்டிற்கு எழுந்தருளித் திருவமுது செய்து, பின்பு சென்றருளல் வேண்டும்' என்று பிரார்த்திக்க, அம்முனிவர்கள் ஆண்டின் இளையரும் அறிவின் முதியருமாகிய முக்களாலிங்கர் பிரார்த்தனைக்கு இரங்கி, விருப்பத்தோடு உடன்பட்டு அவருடன் அவரது வீட்டுக்குப் போயினர். அங்கே தமது புத்திரர் அருமைக் கருத்தை உணர்ந்து, அருந்ததியினும் சிறந்த மயிலம்மையார் அன்போது உபசரிக்கத் திருவமுது செய்து, அவரது கற்பின் திறத்தையும்,...
Published 09/04/21
அவரது திருவயிற்றிலே, ஏழாவது தலைமுறையாகத் தமிழ்நாடு செய்த தவத்தானே, ஒரு சற்புத்திரர் திருவவதாரம் செய்து முக்களாலிங்கர் என்னும் பிள்ளைத் திருநாமம் சாத்தப் பெற்று ஒழுக்கம் அன்பு அருள் முதலிய நற்குணங்களோடு வளருவார் ஆயினார். பின்பு முக்களாலிங்கர் ஐந்து பிராயத்திலே, பிதாவினாலே வித்தியாரம்பம் செய்விக்கப் பெற்றுப் பள்ளிக் கூடத்தில் அமர்ந்து கற்பாராயினார். அங்ஙனம் கற்கும் காலத்திலே, திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து சிவஸ்தலயாத்திரையாகப் புறப்பட்ட சில முனிவர்கள் விக்கிரமசிங்கபுரத்து வீதியிலே சென்றார்கள்.
Published 08/21/21
பாண்டிவள நாட்டிலே, பொதியமலைச் சாரலிலே, பாவநாசம் என்னும் திருப்பதியைச் சார்ந்த விக்கிரமசிங்கபுரத்திலே, அகத்திய மாமுனிவரிடத்தே எழுதலைமுறை அளவும் அருட்புலமை நிரம்பும் வண்ணம் வரம் பெற்ற பரம்பரைச் சைவ வேளாளர் குலத்திலே, சிவபத்தி அடியார் பத்திகளில் சிறந்தவரும் கல்வி செல்வம் என்னும் இரண்டும் ஒருங்குடையவரும் ஆகிய ஆனந்தக் கூத்தர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் மனைவியார் கற்பிலே தமக்கு உயர்வு ஒப்பில்லாத மயிலம்மையார் என்று எவராலும் சிறப்பித்துச் சொல்லப்படுபவர்.
Published 08/07/21
சிவஞான பாடியம் என்பது 18 ம் நூற்றாண்டியில் சிவஞான முனிவரால் சைவ சிந்தாந்த முதன்மை நூற்களில் ஒன்றான சிவஞானபோதத்திற்கு எழுதப்பட்ட உரைநூல் ஆகும். இதை மாபாடியம் என்றும் அழைப்பர். இந்த நூல் திருவாவடுதுறையில் அரங்கேற்றப்பட்டது.
Published 07/31/21
சுத்தாத்துவித சித்தாந்த சைவப் பாடியகாரர் என்ற பெயரில் இவருக்குத் தனிச் சந்நிதி அமைத்து வழிபடுதலும் தக்கதே. இவ்வகையில் முதலடி எடுத்து வைத்து இம்மரபினைத் தொடங்கி வைத்திருக்கும் திருநணா (பவானி) சிவனடியார் திருக்கூட்டத்தின் பணி பாராட்டுக்குரியது. மெய்கண்ட தேவர் திருவடி வாழ்க மாதவச் சிவஞான முனிவர் திருவடி வாழ்க! தமிழ்ச் சித்தாந்த சைவச் செந்நெறி ஓங்குக!
Published 07/20/21
மாதவச்சிவஞான முனிவரின் வரலாற்றைத் திருவாவடுதுறை ஆதீனப்புலவர் மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் ஒரு புராணமாக விரிவாகப்பாடுவதற்குத் தொடங்கினார் எனத் தெரிகின்றது. இதுவரை மாதவச் சிவஞான முனிவர் தமிழுக்கும், சித்தாந்த சைவத்துக்கும், திருவாவடுதுறை ஆதீனத்திற்கும் பலவகையாலும் புகழ்மிகுமாறு தொண்டாற்றி வாழ்ந்த திறம் ஒருவாறு சுருக்கமாக எழுதப்பட்டது. இத்தகைய சிறப்பு மிக்க மாதவச் சிவஞான முனிவரைச் சித்தாந்த சைவர்கள் பல வகையாலும் நினைவு கூறக் கடமைப்பட்டவர்கள் என்பது இதனால் ஒரளவு...
Published 07/17/21
மாணாக்கர்கள் மாதவச் சிவஞானமுனிவருக்கு அமைந்த மாணாக்கர்களுள் பன்னிருவர் மிகச் சிறந்த மாணாக்கர்களாகக் கருதப்படுகின்றனர். அவர்களுள்ளும் கவிராட்சச கச்சியப்ப முனிவர் முதன்மை மாணாக்கராக மதிக்கப்படுகின்றார். மற்றும் தொட்டிக்கலை மதுரகவி சுப்பிரமணிய முனிவர், காஞ்சிபுரம் இலக்கணம் சிதம்பரநாத முனிவர் மிகச் சிறந்த மாணாக்கர்களாகக் கருதப்படுகின்றனர். புகழ்நூல்கள் மாதவச் சிவஞான முனிவர் பெருமானின் புகழினை விரிவாகக் கூறும் தனிப்பாடல்களும், பதிகங்களும், சிற்றிலக்கியங்களும் மிகப்பல உள்ளன. அவற்றுள் தொட்டிக்கலை...
Published 07/13/21
திருவாவடுதுறை ஆதீனக்குலதீபம் திருநந்தி மரபு – மெய்கண்டசந்தானத்தின் வழியில் வந்த நமச்சிவாய தேசிகரால் நிறுவப்பெற்ற திருவாவடுதுறை ஆதீனத்தின் புகழ் இம்முனிவர் பெருமானால் பெரிதும் விளக்கமுற்றுத் திகழ்ந்ததனால் இவர் திருவாவடுதுறை ஆதினக் குல தீபம் எனப் போற்றப்படுகின்றார். இன்னும் இம்முனிவர் பெருமான் பாடிய வாழ்த்துப் பாடலே இவ்வாதீனத்துக் குருமரபு வாழ்த்தாக இவ்வாதினத்தால் பாடப்பட்டு வருகிறது. சீர்வளர்சீர் குருமகா சந்நிதானங்கள் நமச்சிவாய தேசிகரை வழிபடும் பொழுது ஓதுவா மூர்த்திகளால் இம்முனிவர் பெருமான்...
Published 07/10/21
வடமொழியில் பிரமசூத்திரம் என்னும் வேதாந்த சூத்திரத்திற்கு சங்கரபாடியம் (இது அத்வைத பாடியம்) இராமாநுஜபாடியம் (இது விசிட்டாத்வைதபாடியம்) நீலகண்ட பாடியம் (இது சிவாத்வைத பாடியம்) எனப் பலபாடியங்கள் உள்ளன. அவ்வக் கொள்கையினர் அவ்வப்பாடியம் எழுதியவர்களைப் பாடியகாரர் எனச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். சித்தாந்த சைவத்துக்குத் தமிழ்ச்சூத்திர நூலாகிய சிவஞான போத சூத்திரத்திற்குத் தமிழில் எழுதப்பட்ட ஒரே பாடியம் மாதவச் சிவஞான முனிவர் எழுதிய சிவஞான பாடியம் மட்டுமே உள்ளது. எனவே மாதவச்சிவஞானமுனிவர் சித்தாந்த...
Published 07/06/21