அகத்தியர் song ep 128
Listen now
Description
சும்மா நீ பார்க்கையிலே மனத்தை யப்பா சுழுமுனையி லோட்டியங்கே காலைப் பாராய்; அம்மாநீ தேவியென்று அடங்கிப் பாராய்; அப்பவல்லோ காயசித்தி யோகசித்தி; உம்மாவும் அம்மாவும் அதிலே காணும்; ஒருமனமாய்ச் சுழுமுனையில் மனத்தை யூன்று; நம்மாலே ஆனதெல்லாஞ் சொன்னோ மப்பா! நாதர்களி லிதையாரும் பாடார் காணே! அகத்தியர் பாடல்
More Episodes
சாபம் கொடுத்திட லாமோ ? - விதி தன்னை நம்மாலே தடுத்திடலாமோ ? கோபந் தொடுத்திடலாமோ ? - இச்சை கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ ?  சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தால்  சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம் நல்லபத்திவிசு வாசம் - எந்த நாளும் மனிதர்க்கு நம்மையாய் நேசம். ராமதேவர் பாடல்
Published 09/10/21
Published 09/10/21
அஞ்செழுத்தி லேபிறந்து அவ்வஞ்செழுத்தி லேவளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள். அஞ்செழுத்தில் ஓர்எழுத்து அறிந்துகூற வல்லீரேல்! அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே! சிவவாக்கியர்
Published 09/10/21