Description
பண்ணப்பா குஷ்டமொடு கறப்பான் போக
பண்பொன்று சொல்லுகிறேன் மைந்தா கேளு
நண்ணப்பா பரங்கியுட பட்டை வாங்கி
நலமான பழச்சாற்றில் ஊறல் போட்டு
விண்ணப்பா ரவிபடவே உலறப் போட்டு
விசையாக இப்படியே பத்து முறை பண்ணு
தண்ணப்பா நன்றாக உலர்ந்த பின்பு
தாக்கி நன்றாய் இடித்து வடிக் கட்டிடாயே
கட்டாகச் சிவனார் தன் வேம்பை வாங்கி
கண்டமதாய் நருக்கிக குழித் தயிலம் வாங்கி
திட்டம தாய் தயிலமதில் பட்டைத் தூளும்
சேர்த்து நன்றாய்ப் பிசைந்துருட்டி வைத்துக்
கொண்டு
மட்டாத நெல்லிக்காய் அளவு கொண்டால்
மாறாத கிரந்தியொடு சூலை புண்கள்
தொட்டவுடன் ஓடுகின்ற குஷ்ட ரோகம்
சொரி சிரங்கு பெருஞ்சிரங்கு இனங் ககேளே
அகத்தியர் பாடல்