Episodes
சமீபத்தில் கிண்டி அரசு மருத்துவமனையில் ஒரு மருத்துவர், கத்திகுத்துக்கு ஆளானார். பாதுகாப்பற்ற சூழலில் மருத்துவர்கள், மருத்திவமனைகள் உள்ளன. இன்னொரு பக்கம், தரமில்லாத மருந்துகள், போதிய அளவில் இல்லாத மருத்துவர்கள், செவிலியர்கள், காலிப் பணியிடங்கள் என ஐ.சி.யு-வில் தவித்துக் கொண்டிருக்கிறது சுகாதாரத்துறை. அமைச்சர் மா. சுப்பிரமணியனும் முன்னுக்கு பின் முரணாகவே பேசிக் கொண்டிருக்கிறார். காப்பாற்றப்படுமா தமிழ்நாடு சுகாதாரத்துறை? முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கவனம் எடுப்பாரா?!
Published 11/16/24
பாஜக இல்லாத ஒரு பெரிய கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருக்கும் எடப்பாடி. சீக்ரெட் டீம், சுற்றுப் பயணம், களையெடுப்பு என 2026-க்கு ஸ்கெட்ச் போட்டு வேலையை தொடங்கி விட்டார் எடப்பாடி. திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் விஜயை, அதிமுக பக்கம் கொண்டு வரவே உருவாக்கப்பட்டுள்ளது சீக்ரெட் டீம். இந்த பக்கம், திமுகவின் 'நவம்பர் 20 தேதி' கூட்டத்தை வைத்து, உதயநிதி சில ஸ்டெப்ஸ் எடுக்கிறார். மாசெ-கள் மாற்றம், இளைஞர்களுக்கு வாய்ப்பு, வேட்பாளர்கள் தேர்வு என வேகம் காட்டும் உதயநிதி...என்ன நடக்கிறது சமகால அரசியலில்?!
Published 11/15/24
Nithyananda has claimed that he has escaped abroad and established a new country called Kailasa, where he is living. At the same time, he is reportedly using women as test subjects for experiments, while also speeding up the search for rare medicinal plants that may exist in Tamil Nadu. He is also involved in preparing an "eternal youth" medicine to remain youthful. Inside his camp, there are reportedly shocking details emerging. The court has also issued a summons for Nithyananda.
Published 11/14/24
'VIJAY & கூட்டணி கட்சிகளால்' 10 சிக்கலில் தவிக்கும் STALIN?!
Published 11/13/24
ஸ்டாலின் Vs எடப்பாடி இருவரும் மோதிக்கொள்வதற்கு பின்னால் இருக்கும் சில சீக்ரெட் டீல்கள். பா.ஜ.க கூட்டணி விவகாரத்தையொட்டி, எடப்பாடியிடம் எகிறிய மாஜிக்கள். மீண்டும் இ.டி ரெய்டால் செந்தில் பாலாஜிக்கு சிக்கல்.
Published 11/12/24
'பாஜகவுடன் கூட்டணி அமையுமா?' என்ற கேள்விக்கு, தேர்தல் நெருங்கும் போது முடிவெடுக்கப்படும் என எடப்பாடி பதில். இது அதிமுகவுக்குள்ளும் பல்வேறு கேள்விகளை உருவாக்கி உள்ளது. கிட்டத்தட்ட ஐந்து தலைவலிகள், எடப்பாடியை கலங்கடித்துக் கொண்டிருக்கிறது. அதனால் இப்படி ஒரு பதிலை அவர் சொல்லி உள்ளார் என்கிறார்கள் உள்விவகாரங்களை நன்கறிந்தவர்கள். என்ன நடக்கிறது அதிமுகவில்? மீண்டும் காட்சிகள் மாறுகிறதா?!
Published 11/11/24
BJP-யில் வெடிக்கும் பஞ்சாயத்துகள்...STALIN நியூ மூவ்!
Published 11/09/24
'EPS- VIJAY- ANBUMANI' புது கூட்டணி... மெகா பிளான்?! சீக்ரெட் மூவ்!
Published 11/08/24
'புல்லட் 3...' EPS-க்கு, மகன் போட்டுத் தந்த ஸ்கெட்ச்!
Published 11/07/24
அமெரிக்காவின் 47 வது அதிபர் ஆகிறார் டொனால்ட் டிரம்ப். எப்படி கமலா ஹாரிஸை வீழ்த்தினார்?. தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?. இங்கே, தமிழ்நாட்டு அரசியலில், கோவைக்கு இரண்டு நாள் கள ஆய்வுக்கு சென்றுள்ளார் மு.க ஸ்டாலின். அங்கே 'அமைச்சர் செந்தில் பாலாஜி கம்பேக் கொடுத்துள்ளார்' என புகழாரம். இதற்கு பின்னணியில் உள்ள அரசியல் கணக்குகள் என்ன?. முக்கியமாக, 'எடப்பாடி மற்றும் எஸ்.பி வேலுமணி' இருவரையும் டார்கெட் செய்து, ஸ்டாலின், செந்தில் பாலாஜிக்கு கொடுத்திருக்கும் முக்கியமான அசைன்மென்ட். அதே நேரத்தில்,...
Published 11/06/24
ோவையில் கள ஆய்வு செய்து வருகிறார் ஸ்டாலின். அடுத்து தென் மாவட்டங்கள் செல்ல உள்ளார். இரண்டு மண்டலங்களை குறிவைத்து தீவிரமாக செயல்பட துடிக்கும் திமுக. உதயநிதியை Focus பண்ணக்கூடிய வேலைகளும் மும்முரமாக நடக்கிறது. இன்னொரு பக்கம், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடியின் முன்பு சில அஸ்திரங்களை ஏவ தயாராகி உள்ளனர் மாவட்ட செயலாளர்கள். பின்னணியில் ஆறு பேர் கொண்ட குழு உள்ளது. இந்த பிரச்சனையை சமாளிக்க, எடப்பாடி புது ரூட் எடுத்துள்ளார். 'திமுக - அதிமுக' வேகம் எடுத்ததற்கு பின்னால், விஜயின் அரசியலும்...
Published 11/05/24
இந்த தீபாவளியையொட்டி அடுத்த ஓராண்டு என்ன செய்ய வேண்டும் என, ஒவ்வொரு கட்சியும் திட்டமிட்டுள்ளனர். மு.க ஸ்டாலின் முதல் விஜய் வரை டார்கெட் நிர்ணயம் செய்துள்ளனர். இதில் எடப்பாடி,உதயநிதி, சீமான், அண்ணாமலை, விஜய், அன்புமணி, காங்கிரஸ் என பல்வேறு கட்சியினரும் போட்டுக் கொண்டிருக்கும் சீக்ரெட் திட்டங்கள், தீபாவளி சபதங்களே இந்த காணொளி.
Published 11/02/24
'விஜய் மாநாடு' அதில் எந்த சமூகத்தினர் அதிக அளவில் இடம் பிடித்தார்கள்?, எந்த வர்க்கத்தினர், எந்த மாவட்டத்தினர் அதிக அளவில் இடம் பிடித்தனர்? அதனால் திமுகவுக்கு , பாஜகவுக்கு என்ன பாதிப்புகள் வரலாம் என விரிவாக டேட்டாக்களை திரட்டி அனுப்பியுள்ளது மத்திய, மாநில உளவுத்துறை. இதையொட்டி தங்களுடைய உத்திகளை மாற்ற தொடங்கும் திமுக மற்றும் பாஜக. இன்னொரு பக்கம் விஜய்க்கு எதிராக அஜித்தை வைத்து ஆட்டத்தை ஆடும் உதயநிதி.
Published 10/30/24
'ஆட்சியில் பங்கு' என்கிற தூண்டிலை வீசினார் விஜய். இது வி.சி.க-வை எதிர்பார்த்தும் வீசப்பட்ட வலையாக வர்ணிக்கப்பட்டது. ஆனால் காட்டமான ஒரு அறிக்கையை பதிலடியாக கொடுத்து இருக்கிறார் திருமாவளவன். இன்னொரு பக்கம் விஜயை Soft கார்னருடன் அணுகுகிறார் எடப்பாடி. குறிப்பாக அ.தி.மு.க விஜய் கூட்டணி சுற்றிய நகர்வுகள், இதற்குள் எடப்பாடிக்கு எக்கச்சக்கமான சவால்களும், சிக்கல்களும் உள்ளன. இங்கே ஆளுங்கட்சியான திமுக, தங்கள் கூட்டணி கட்சிகளை தக்க வைக்க சில முக்கியமான நகர்வுகளை, சீக்ரெட் சமாச்சாரங்களை...
Published 10/29/24
விஜயுடைய முதல் மாநாட்டு உரையை, திமுகவும் ய, அதிமுகவும் எப்படி பார்க்கிறார்கள்? குறிப்பாக உதயநிதியின் அரசியல் எதிர்காலத்துக்கு சிக்கல் ஏற்படுத்தியுள்ளது. இன்னொரு பக்கம் நம்பர் 2 ரேஸில், எடப்பாடி பின்னுக்கு தள்ளப்படக் கூடிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. என்ன நடக்கிறது?
Published 10/28/24
27ஆம் தேதி விக்கிரவாண்டியில் த.வெ.க-வின் மாநாட்டில், விஜய் பேச போகும் முக்கிய அரசியல் இதுதான். இன்னொரு பக்கம் இளங்கோவன் வாயை திறந்தால்... எடப்பாடிக்கு செக் வைக்க டெல்லி பிளான். அடுத்து வைத்தி டார்கெட் செய்யப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் முக்கியமாக ஒன்றுபட்ட அதிமுகவை விரும்பாத பாஜக. அதற்கு முயற்சி செய்தார் வைத்திலிங்கம். அதனால் அவருக்கு பாஜக போட்ட லாக், ED RAID. இதனால் பன்னீர் பதற்றம்.
Published 10/25/24
Vijay மாநாடு Thiruma ரூட் ஆட்டத்தை மாற்றும் Stalin!
Published 10/24/24
திமுக கூட்டணி கட்சிகளை டார்கெட் செய்யும் எடப்பாடி. காரணம் உட் கட்சியில் அவர் தலைமைக்கு சுற்றி சுற்றி பிரச்சனைகள். தென்தமிழ்நாட்டில் பலவீனமாக இருக்கும் அதிமுக. இன்னொரு பக்கம் விஜய்-ன் அரசியல் பிரவேசம். எல்லாவற்றையும் சரிகட்ட, திமுக கூட்டணி கட்சிகளை டார்கெட் செய்கிறார் எடப்பாடி. சுதாரிக்கும் ஸ்டாலின். இன்னொரு பக்கம் விஜய்-ன் மாநாடு. வாட்ச் பண்ணும் உளவுத்துறை. மூன்று முக்கிய நோட்ஸ்களை பாஜக அரசாங்கத்திற்கு அனுப்பி உள்ளது. அவையெல்லாம் என்ன?!
Published 10/23/24
Seeman போட்ட கணக்கு, மாற்றி ஆடிய Thiruma புது கணக்கு! | Elangovan Explains
Published 10/22/24
இந்தமுறை மழையில் இருந்து சென்னை தப்பித்தாலும், அடுத்த முறை பாதிக்க வாய்ப்பு அதிகம். ஸ்டாலினுக்கு வார்னிங் தரும் சுமார் 1100 கிலோமீட்டர் தூரம் உள்ள வடிகால் பணிகள். ஸ்கோர் செய்த எ.வ வேலு... அப்சட்டில் டி.ஆர்.பி ராஜா. வேலுமணி செய்த ஒரு சிறப்பு யாகம் ஆனாலும் சுத்தி சுத்தி பஞ்சாயத்து வெடிக்கிறது. உதயநிதி மீது அதிருப்தியில் சீனியர் அமைச்சர்கள்...
Published 10/19/24
திமுக தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விசிக உள்ளிட்ட மெகா கூட்டணி அமைத்து ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. திமுக ஆட்சியின் மீதும் எக்கச்சக்கமான புகார்கள், குற்றச்சாட்டுகள் உள்ளன . விசிக மது ஒழிப்பு மாநாடு தொட்டு கம்யூனிஸ்டுகளின் சாம்சங் தொழிலாளர்களுக்கான போராட்டம் வரை நிறைய பிரச்சனைகள் உண்டு. இதில் கூட்டணி கட்சி தலைவர்களோ திமுக மீது மயிலிறகு வருடல் போல மென்மையாக விமர்சனங்களை வைக்கின்றனர். ஆனால் வீரியமான போராட்டங்களை முன்னெடுப்பதில்லை என கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தங்கள் தலைமை...
Published 10/18/24
அதிமுக 53 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இருந்தும் அதிமுகவை சுற்றி எக்கச்சக்கமான பஞ்சாயத்துகள். குறிப்பாக எடப்பாடி தவறவிட்ட ஏழு பொன்னான வாய்ப்புகள். இன்னொரு பக்கம் முற்றும் நெருக்கடிகள். இதையொட்டி மூன்று டார்கெட்டுகளை செட் செய்து, புதிய சபதமும் ஏற்றுள்ளார் எடப்பாடி என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். எடப்பாடி 2.0 வெல்லுமா?!
Published 10/17/24
சென்னை பெருமழை ஒரே நாளில் வெளுத்து வாங்கிவிட்டது. அரசு,உடனடியாக களத்தில் இறங்கி செயல்பட்டது. ஸ்டாலினும், உதயநிதியும் சென்னையை சுற்றி சுற்றி வலம் வந்தார்கள். ஆனாலும் இந்த வேகம் ரொம்ப தாமதம். இன்னொரு பக்கம், ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சென்னையை மிரட்டி வருகிறது. சென்னை மிதக்காமல் இருக்க 5 முக்கியமான திட்டங்கள் உள்ளன. இதை செய்தாலே சென்னை சொர்க்க நகரமாக மின்னும். செய்வாரா ஸ்டாலின்?!
Published 10/16/24
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் இரவில் இருந்து ஓயாமல் பெய்யும் அதி கனமழை. ஒட்டுமொத்த சென்னையும் எப்படி இருக்கிறது? சில இடங்களில் தண்ணீர் அகற்றப்பட்டும், பல இடங்களில் தண்ணீர் தேங்கியும் இருக்கிறது. அதே நேரத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் களத்தில் தீவிரமாக இறங்கி செயல்படுகின்றனர். ஆளும் திமுக அரசின் வேகம் தெரிகிறது இருந்தாலும் காலம் தாழ்ந்த நடவடிக்கைகளாகவும் இருக்கிறது. மழையில் எப்படி இருக்கிறது சென்னை? லைவ் ரிப்போர்ட்! இன்னொரு புறம் சாம்சங் தொழிலாளர்கள்...
Published 10/15/24