Sollaatral (சொல்லாற்றல்) in ATR Thirukkural Sinthanaikal by Dr.R.Prabhakaran
Listen now
Description
ஒருவனுடைய சொல்லாற்றல் அவனுடைய மற்ற ஆற்றல்களைவிட வலிமையான ஆற்றல். சொல்லாற்றலைப் பற்றி ஆய்வு செய்து தங்கள் கருத்துக்களைக் கூறிய கிரேக்கத் தத்துவஞானிகளைப்போல், வள்ளுவரும் சொல்லாற்றலைப் பற்றி தன்னுடைய அரிய கருத்துக்களைக் கூறியுள்ளார். சொல்லாற்றலைப் பற்றிய வள்ளுவரின் கருத்துக்களை, சொல்வன்மை, அவையறிதல், அவையஞ்சாமை ஆகிய அதிகாரங்களில் காணலாம். ஆக்கமும் கேடும் சொல்லால் வருதலால் சொல்லில் தவறு ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார். அவையில் பேசுவதற்கு அஞ்சுபவர்கள் பலர். ஆனால், கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள் அஞ்சாமல், தங்கள் கருத்துக்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதும், அவ்வாறு பகிர்ந்துகொள்ளத் தெரியாதவர்கள் மணமில்லாத மலர்களைப் போன்றவர்கள் என்பதும் வள்ளுவரின் கருத்து. ஒரு அவையில் பேசும்பொழுது, அவையில் இருப்போரின் தன்மையை அறிந்து அதற்கேப்பப் பேச வேண்டும் என்றும் வள்ளுவர் கூறுகிறார். ஒருவருடைய பேச்சு, கேட்பவர்களைக் கவர்வதாகவும், கேளாதவர்களும் கேட்க விரும்பும் வகையிலும் இருக்கு வேண்டும் என்று வள்ளுவர் அறிவுரை கூறுகிறார். ஒரு அவையில் பேசும்பொழுது, சுருங்கச் சொல்லி விளங்கவைக்க வேண்டும் என்ற கருத்தையும் வள்ளுவர் வலியுறுத்துகிறார். வள்ளுவர் கூறும் சொல்லாற்றலுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் அறிஞர் அண்ணா.   Valluvar also has expressed his scholarly opinions on rhetoric. Valluvar says that since speech can result in advantages and disadvantages to the speaker, one should take great care in preparing one's speech. Many are afraid to address an audience. But, Valluvar believes that those who excel in knowledge should share their knowledge with others without fear. Despite their scholarly knowledge, if someone is incapable of sharing their ideas with an audience, they are like flowers without fragrance. Valluvar also says that when one speaks in a forum, one should know his audience and adjust the presentation's subject matter and style to suit the audience. Valluvar advises that one's speech sh
More Episodes
A recap of 2022 of major political, social, sports events. Presented by Roopan Jeganathan, Mani Kumaran and Jeyabalan Sundaravelu. American Tamil Media (ATM) is registered as a nonprofit organization in 2018, in the state of California. ATM is an IRS approved 501(c)(3) charitable organization....
Published 01/01/23