கம்பீர நடை..90 வயது.. - சாம் மானெக் ஷா! | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 10
Listen now
Description
அந்த மனிதரின் கம்பீர நடைப்பயிற்சியைக் காண குன்னூர் நகரமே காத்துக்கிடக்கும். செல்லப் பிராணிகள் அணிவகுக்க, தன் மனைவியின் கைகோத்து, நேர்கொண்ட பார்வையும் மிடுக்குமாக அவர் நடைபயிலும் அழகே அழகுதான். வழியெங்கும், வணங்குபவர்களின் வயதுக்கேற்ப ராணுவ ஒழுங்கோடு மேலெழும்பி அசைந்துதிரும்பும் அவர் கரங்கள். குழந்தைகளைப் பார்த்தால் மட்டும், சட்டென்று மென்முகம் தரித்து கன்னங்களை செல்லமாகத் தட்டி மலர்கள் பரிசளித்துச் செல்வதை வழக்கமாகவே வைத்திருந்தார். 90 வயதைத் தாண்டியும் அந்தமனிதரைப் பார்க்க நாடெங்கிலும் இருந்து பலர் வந்துகொண்டே இருந்தார்கள். முக்கிய தலைவர்கள் ராணுவ தளபதிகள், உயர் அதிகாரிகள், நிர்வாகிகள்... எனப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.
More Episodes
கடல் கடந்து வந்து இந்த மண்ணையும் மக்களையும் மனதார நேசித்தவருக்குத் தலைமுறைகள் தாண்டியும் நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும். தமிழ்மொழி அரியணை ஏற செயல்திட்டம் வகுத்துக் கொடுத்தவரை என் மனம் இப்படித்தான் வரித்து வைத்திருக்கிறது... எழுத்து & குரல்  - உதயச்சந்திரன் | Podcast channel manager- பிரபு...
Published 08/30/22
இப்போதெல்லாம் நாளிதழ்களைப் புரட்டினாலே ஏமாற்றமும் குழப்பமும்தான் மிஞ்சுகின்றன.குறிப்பாக, விளையாட்டுச் செய்திகளைத் தாங்கிவரும் பக்கத்தில் சோகம் ததும்புகிறது. நேரத்தையும் நிறத்தையும் மாற்றி ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் கிரிக்கெட்; தோற்றுப்போவதற்காகவே இந்திய மண்ணுக்குவரும் வெளிநாட்டு வீரர்கள்;...
Published 08/30/22
முப்பது ஆண்டுகளுக்கு முன் நடந்தது அந்தச் சம்பவம். ஒடிசாவின் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் அந்த இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி. மதுரையில் பிறந்து முதுகலைத் தமிழ் இலக்கியம் படித்து, முதன்முதலில் தமிழிலேயே சிவில் சர்வீஸ் தேர்வெழுதி வெற்றிபெற்றவர். தமிழ்மேல் தீராக்காதல் கொண்டவரைக் காலம்...
Published 08/30/22