Sivagnana Mapadiyam - Muyatchi-Oozh
Listen now
Description
பள்ளிக்கூடத்தினின்றும் வந்த முக்களாலிங்கர் அம்முனிவர்களைச் சந்தித்துத் தரிசித்து வணங்கி,"சுவாமிகாள்! அடியேன் வீட்டிற்கு எழுந்தருளித் திருவமுது செய்து, பின்பு சென்றருளல் வேண்டும்' என்று பிரார்த்திக்க, அம்முனிவர்கள் ஆண்டின் இளையரும் அறிவின் முதியருமாகிய முக்களாலிங்கர் பிரார்த்தனைக்கு இரங்கி, விருப்பத்தோடு உடன்பட்டு அவருடன் அவரது வீட்டுக்குப் போயினர். அங்கே தமது புத்திரர் அருமைக் கருத்தை உணர்ந்து, அருந்ததியினும் சிறந்த மயிலம்மையார் அன்போது உபசரிக்கத் திருவமுது செய்து, அவரது கற்பின் திறத்தையும், சிவனடியார்க்குச் செய்யும் திருத்தொண்டின் திறத்தையும் தெய்வம்தொழாஅள் கொழுநற் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை  என்னும் திருக்குறளுக்கு இலக்கியமாக நாயகனையே தெய்வம் எனக் கொண்டு ஒழுகும் நலத்தினையும் சிறப்பித்து,
More Episodes
மெய்கண்டார் இயற்றிய 'சிவஞான போதம்' சைவ சாத்திர நூல்களில் ஒன்றாகும். இந்நூலுக்கு திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சார்ந்த சிவஞான முனிவர் 'சிவஞான மாபாடியம்' என்ற பேருரையை எழுதினார். பண்டித நடையில் அமைந்த பேருரையை அனைவருக்கும் புரியும் விதமாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த சி.சு.மணி...
Published 08/31/23

Published 08/15/23
Published 08/15/23