Sivagnana Mapadiyam - Nandriyurai
Listen now
Description
பின்னர் ஆனந்தக் கூத்தர் புத்திரராகிய முக்களா லிங்கரோடு ஆதீன முனிவர்களிடத்தே போய் வணங்கியவழிச் சத்திநிபாதம் உடைய புத்திரர் பிறவிப் பெருந்துன்பக் கடலினின்றும் கரையேறக் கருதி, அம்முனிவர்களோடு தாம் செல்ல வேண்டும் என்னும் குறிப்பினைத் தந்தையாருக்கு உணர்த்த, அவர் புத்திரரைப் பிரியச் சிறிதும் மனமில்லாது இருந்தும் ஒருவாறு இசைந்து அவரை அவர்களோடு விடுத்து வீட்டுக்குத் திரும்பினார். தந்தையார் நீங்கிய பின்பு, முக்களாலிங்கர் ஆதீனத்து முனிவர்களோடு வழிக்கொண்டு மார்க்கங்களில் உள்ள சிவஸ்தலங்களைத் தரிசித்துக் கொண்டு, சோழ நாட்டில் உள்ள திருவாவடுதுறையை அடைந்து, மடாலயத்தின் உள்ளே புகுந்து, ஆதீன பரம முதற்குரவராகிய நமச்சிவாய மூர்த்திகளைத் தரிசித்துத் திருவருள் நோக்கம் பெற்றுக் கொண்டு, அப்பொழுது சின்னப்பட்டத்தில் எழுந்தருளியிருந்த ஞானாசாரியராகிய பின்வேலப்ப தேசிகரை ஒடுக்கத்திலே போய்த் தரிசித்துப் பேரன்போடு வணங்கினார்.
More Episodes
மெய்கண்டார் இயற்றிய 'சிவஞான போதம்' சைவ சாத்திர நூல்களில் ஒன்றாகும். இந்நூலுக்கு திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சார்ந்த சிவஞான முனிவர் 'சிவஞான மாபாடியம்' என்ற பேருரையை எழுதினார். பண்டித நடையில் அமைந்த பேருரையை அனைவருக்கும் புரியும் விதமாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த சி.சு.மணி...
Published 08/31/23

Published 08/15/23
Published 08/15/23