Epi 12 Part-1 பூனை குட்டி குதிரை மீது ஏறிக்கொண்டது
Listen now
Description
வைத்திய செலவுக்கு தெனாலிராமனிடம் பணம் இல்லை. ஆகையால் அவ்வூரில் வட்டிக்கொடுக்கும் சேட்டை அணுகினான். அதற்கு சேட்டும் "பணத்தை எப்போது திருப்பிக்கொடுப்பாய்" என்று கேட்டார். தெனாலிராமனும் உயர் ஜாதி அரேபியக் குதிரை வைத்திருந்தான். நல்ல விலை போகும் அதனால் உடல் நலம் தேறியதும் குதிரையை விற்றுப் பணம் தருவதாகச் சொன்னான். அவன் சொன்னதின் பேரில் சேட்டும் நம்பிக்கையோடு பணம் கொடுத்தான். பல மாதங்கள் ஆயின. தெனாலிராமனிடமிருந்து பணம் வருவதாகத் தெரியவில்லை. ஆகையால் சேட் தெனாலிராமனை சந்திக்கப் புறப்பட்டான்... LISTEN TO KNOW THE FULL STORY. --- Send in a voice message: https://anchor.fm/sriko-india/message
More Episodes
உலகிலேயே வெண்மையான பொருள் எது? வெள்ளி நகை பால்  சம்பா மலர் மல்லிகை சுண்ணாம்பு.... ஒரு பெரிய அறையில் தரை விரிப்பின் மீது இவற்றை வைத்து, கதவு மற்றும் ஜன்னல்களைச் சாத்தித் திரையிட்டார்.... உலகில் எல்லாவற்றையும் விட வெண்மையான பொருள் பாலோ, வெள்ளி நகையோ, சுண்ணாம்போ அல்லது மலர்களோ அல்ல... Listen...
Published 08/07/21
Published 08/07/21
“அரசே! தெனாலிக்கு வயதாகி விட்டது. ஓய்வு கொடுங்கள்” என்றார் அமைச்சர், அரசரிடம் பதில் இல்லை. மறுநாள் அரசர், “என் மனதில் ஒரு கேள்வி, உலகிலேயே வெண்மையான பொருள் எது? இதற்குச் சரியான பதிலை நீங்கள் சொல்லி விட்டால், தெனாலியை ஓய்வு கொடுத்து அனுப்பி விடுவேன்” என்றார். வெள்ளி நகை தான், மல்லிகை தான்,...
Published 08/06/21