இயற்கைப் பேரழிவுகள்..மீண்ட மக்கள்..வெளிவராத கதை | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 13
Listen now
Description
பதினைந்து ஆண்டு களுக்கு முன்னர் சென்னை மாநக ராட்சியின் துணை ஆணைய ராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டம். மிரட்சியுடனும் பிரமிப்பு டனும் சென்னையைப் பார்த்துப் பழகிய எனக்கு, ரிப்பன் மாளிகையின் வழியே சென்னை நகரின் நீள அகலத்தை நிர்வகிப்பது சுவாரஸ்யமான அனுபவ மாகத்தான் இருந்தது. காலை ஆறரை மணியிலிருந்து துப்புரவுப் பணி மேற்பார்வை. பின், நாள் முழுக்க அலுவலகம். நள்ளிரவு ஒரு மணியிலிருந்து அதிகாலை மூன்றரை மணி வரை போக்குவரத்துக்கு இடையூறின்றி நடக்கும் சாலைப்பணிகளை ஆய்வு செய்வது. மீண்டும் காலை ஆறரை மணி. ஞாயிற்றுக்கிழமை காலை மட்டும் சற்றுத் தாமதமாக அலுவலகம் செல்லலாம். பருவ மழைக்காலங்களில் ரிப்பன் மாளிகையின் எழுதப்படாத விதி இதுதான் அப்போது.பதினைந்து ஆண்டு களுக்கு முன்னர் சென்னை மாநக ராட்சியின் துணை ஆணைய ராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டம். மிரட்சியுடனும் பிரமிப்பு டனும் சென்னையைப் பார்த்துப் பழகிய எனக்கு, ரிப்பன் மாளிகையின் வழியே சென்னை நகரின் நீள அகலத்தை நிர்வகிப்பது சுவாரஸ்யமான அனுபவ மாகத்தான் இருந்தது. காலை ஆறரை மணியிலிருந்து துப்புரவுப் பணி மேற்பார்வை. பின், நாள் முழுக்க அலுவலகம். நள்ளிரவு ஒரு மணியிலிருந்து அதிகாலை மூன்றரை மணி வரை போக்குவரத்துக்கு இடையூறின்றி நடக்கும் சாலைப்பணிகளை ஆய்வு செய்வது. மீண்டும் காலை ஆறரை மணி. ஞாயிற்றுக்கிழமை காலை மட்டும் சற்றுத் தாமதமாக அலுவலகம் செல்லலாம். பருவ மழைக்காலங்களில் ரிப்பன் மாளிகையின் எழுதப்படாத விதி இதுதான் அப்போது. எழுத்து & குரல்  - உதயச்சந்திரன் | Podcast channel manager- பிரபு வெங்கட்
More Episodes
கடல் கடந்து வந்து இந்த மண்ணையும் மக்களையும் மனதார நேசித்தவருக்குத் தலைமுறைகள் தாண்டியும் நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும். தமிழ்மொழி அரியணை ஏற செயல்திட்டம் வகுத்துக் கொடுத்தவரை என் மனம் இப்படித்தான் வரித்து வைத்திருக்கிறது... எழுத்து & குரல்  - உதயச்சந்திரன் | Podcast channel manager- பிரபு...
Published 08/30/22
அந்த மனிதரின் கம்பீர நடைப்பயிற்சியைக் காண குன்னூர் நகரமே காத்துக்கிடக்கும். செல்லப் பிராணிகள் அணிவகுக்க, தன் மனைவியின் கைகோத்து, நேர்கொண்ட பார்வையும் மிடுக்குமாக அவர் நடைபயிலும் அழகே அழகுதான். வழியெங்கும், வணங்குபவர்களின் வயதுக்கேற்ப ராணுவ ஒழுங்கோடு மேலெழும்பி அசைந்துதிரும்பும் அவர் கரங்கள்....
Published 08/30/22
இப்போதெல்லாம் நாளிதழ்களைப் புரட்டினாலே ஏமாற்றமும் குழப்பமும்தான் மிஞ்சுகின்றன.குறிப்பாக, விளையாட்டுச் செய்திகளைத் தாங்கிவரும் பக்கத்தில் சோகம் ததும்புகிறது. நேரத்தையும் நிறத்தையும் மாற்றி ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் கிரிக்கெட்; தோற்றுப்போவதற்காகவே இந்திய மண்ணுக்குவரும் வெளிநாட்டு வீரர்கள்;...
Published 08/30/22