பட்டத்து யானையும் குட்டி இளவரசனும் ! | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 4
Listen now
Description
பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருக்கும் கலெக்டர் அலுவலகம். தயக்கத்துடனும் கண்களில் ஏக்கத்துடனும் பொதுமக்கள் சிலர். அதற்கு நேர்மாறாய் மிடுக்கோடு நடைபயிலும் உயரதிகாரிகள். ஒருபுறம் நிறைவேறாத கோரிக்கைகளைத் தாங்கிய கசங்கிப்போன காகிதங்கள். மறுபுறம் ரகசியம் காக்கும் அரசுக் கோப்புகளின் அசைவில்கூட அலட்சியம். எழுத்து & குரல்  - உதயச்சந்திரன் | Podcast channel manager- பிரபு வெங்கட்
More Episodes
கடல் கடந்து வந்து இந்த மண்ணையும் மக்களையும் மனதார நேசித்தவருக்குத் தலைமுறைகள் தாண்டியும் நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும். தமிழ்மொழி அரியணை ஏற செயல்திட்டம் வகுத்துக் கொடுத்தவரை என் மனம் இப்படித்தான் வரித்து வைத்திருக்கிறது... எழுத்து & குரல்  - உதயச்சந்திரன் | Podcast channel manager- பிரபு...
Published 08/30/22
அந்த மனிதரின் கம்பீர நடைப்பயிற்சியைக் காண குன்னூர் நகரமே காத்துக்கிடக்கும். செல்லப் பிராணிகள் அணிவகுக்க, தன் மனைவியின் கைகோத்து, நேர்கொண்ட பார்வையும் மிடுக்குமாக அவர் நடைபயிலும் அழகே அழகுதான். வழியெங்கும், வணங்குபவர்களின் வயதுக்கேற்ப ராணுவ ஒழுங்கோடு மேலெழும்பி அசைந்துதிரும்பும் அவர் கரங்கள்....
Published 08/30/22
இப்போதெல்லாம் நாளிதழ்களைப் புரட்டினாலே ஏமாற்றமும் குழப்பமும்தான் மிஞ்சுகின்றன.குறிப்பாக, விளையாட்டுச் செய்திகளைத் தாங்கிவரும் பக்கத்தில் சோகம் ததும்புகிறது. நேரத்தையும் நிறத்தையும் மாற்றி ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் கிரிக்கெட்; தோற்றுப்போவதற்காகவே இந்திய மண்ணுக்குவரும் வெளிநாட்டு வீரர்கள்;...
Published 08/30/22