துவும்பா – அவுஸ்திரேலியாவின் பூங்கா நகரம் - ஒலியோடை – Oliyoodai Tamil Podcast
Listen now
Description
துவும்பா: குவின்ஸ்லாந்து மாநிலத்தின் தலைநகர் பிரிஸ்பேனில் இருந்து 130 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கிறது இந்த ரம்யமான அவுஸ்திரேலிய நகரம். பிரபலமான Great Dividing Range மலைத்தொடரின் மகுடமாக திகழும் துவும்பா, கடல்மட்டத்திலிருந்து 700 மீற்றர் உயரத்தில் அமைந்திருக்கிறது. நூற்றைம்பதுக்கும் அதிகமான பூங்காக்களும் பூந்தோட்டங்களும் நிறைந்திருக்கும் துவும்பாவுக்கு பூங்கா நகரம் என்பது மிகவும் பொருத்தமான ஒரு பெயர்தான். இயற்கையையும் அழகியலையும் ஒன்றாக கண்டுகழிக்க பல பிரபலமான பூங்காக்கள் நகரச் சுற்றிலும் அமைந்திருக்கின்றன. நகர மத்தியிலேயே இருக்கும் Queens பூங்காவும் அதனோடு இணைந்த தாவரவியல் பூங்காவும் வருடத்தின் எந்த காலத்திலும் அழகிய மலர்க் காட்சிகளைக் கண்டுகளிப்பதற்கு முதன்மையான இடமாகும். நூற்றுக்கணக்கான வாசனை மலர்களால் நிறைந்திருக்கும் Laurel Bank பூங்காவில் சில மணிநேரங்களைக்கூட நாம் செலவிடலாம். துவும்பாவில் பல்வேறு சர்வதேச பின்னணிகளை கொண்ட சிறப்பு பூக்காகளும் இருக்கின்றன. தென் குவின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஜப்பானிய பூந்தோட்டம், Annand ஏரிக்கு அருகே இருக்கும் நியூசிலாந்து பூங்கா, மற்றும் ஈரநில தாவரங்களின் பூங்கா என்பன இவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை. ஆண்டு பூராவும் அழகியலோடு நம்மை வரவேற்கும் துவும்பா வண்ணமயமான மலர்கள் பூத்துக்குலுங்கும் வசந்தகாலத்தில் இன்னமும் ரம்யமானது. ஆண்டு தோறும் செப்டெம்பர் மாதம் துவும்பாவில் மலர்களின் திருவிழா கொண்டாடப்படுகிறது. பத்து நாட்கள் நீடிக்கும் இந்த கொண்டாட்டத்தில் Grand Central மலர் அணிவகுப்பு, உட்பட பல போட்டிகள், சமூக நிகழ்ச்சிகள் என்று நகரே களைகட்டியிருக்கும். துவும்பா நகரின