லோன் பைன் கோவாலா சரணாலயம் - ஒலியோடை – Oliyoodai Tamil Podcast
Listen now
Description
லோன் பைன் கோவாலா சரணாலயம் 130க்கும் அதிகமான கோவாலாக்களைக் கொண்ட உலகின் முதலாவதும் பெரிதுமான கோவாலா சரணாலயமாகும். அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தலைநகரான பிரிஸ்பேன் நகருக்கும் கோல்ட் கோஸ்ட் நகருக்கும் அண்மையில் அமைந்துள்ள இந்த சரணாலயம், பலவகையான சுற்றிலாப் பிரயாணிகளையும் கவரும் ஒரு பிரதான இடமாகும். கோவாலாக்கள் அவுஸ்திரேலியாவுக்கே உரித்தான விலங்குகளில் முக்கியமானவை. லொன் பைன் அழகிய சோம்பேறிகளான கோவாலாக்களை பார்கக்கூடிய ஒரு முக்கிய இடமாகும். அத்தொடு இங்கு கோவாலாக்களுன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முடிவதும் விசேடமானதாகும். லோன் பைனில் கோவாலாக்கள் மட்டுமல்லாமல் காங்காருகள், காட்டு நாய்கள், கழுகுகள், ஆந்தைகள் என பல வகையான அவுஸ்திரேலிய விலங்குகளுக்கும் பறவைகளும் உள்ளன. லோன் பைன் சரணாலயத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளைக் கவரும் முக்கிய அம்சமாக கோவாலாக்கள் இருந்தாலும், பாம்புகளுன் படம் எடுத்துல், கங்காருகளுக்கும் பறவைகளுக்கும் உணவூட்டுதல் போன்ற நடவடிக்கைகளும் முக்கியமானவை. இவற்றைத் தவிரவும் செம்மறி ஆடுகள் காட்சியும் பறவைகள் காட்சியும் தவறவிடாமல் பார்க்கவேண்டிய நிகழ்ச்சிகளாகும். ஆகவே, எப்போதாவது பிரிஸ்பேனுக்கோ, கோல்ட் கோஸ்டுக்கோ வந்தால் தவறாமல் லோன் பைன் கோவாலா சரணாலயத்துக்கும் வந்து செல்லுங்கள். http://archive.org/download/NimalsTravelogue1-Tamil-LonePineKoalaSanctuary/NimalsTravelogue1-Tamil-LonePineKoalaSanctuary.mp3 Download