Episodes
விடுதலைக்குப் பிறகு அமைந்த முதல் அரசே, ‘மைனாரிட்டி அரசு’ என்று அழைக்கப்பட்டது. அதன் பிறகு அமைந்த அரசுகள் பெரும்பான்மை, அசுரப் பெரும்பான்மை பெற்ற அரசுகளாக அமைந்தன. Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
பெரியோர்களே... தாய்மார்களே! - 62 | ‘அண்ணா ஏன் வரவில்லை?' என்று பெரியாரிடம் கேட்கப்பட்டது. ‘முத்தன் ஏன் வரவில்லை, முருகன் ஏன் வரவில்லை என்று கேட்பாயா?” என்று பதில் கேள்வி போட்டார் பெரியார். அவரின் பதில் கடுமையான எதிர்வினை ஆனது.. Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
ஓர் இரவில் ஒரு நாடகத்தை எழுதி, அது சினிமாவாகவும் வந்த ‘ஓர் இரவு’ காவியத்தை அண்ணா எழுதியதும் இந்த அறையில்தான். பெரியாருடன் நேருக்குநேராக மோதக் காரணமான ‘1947 ஆகஸ்ட் 15 துக்கநாள் அல்ல, மகிழ்ச்சிக்குரிய நாள்’ என்ற அறிக்கையை அண்ணா எழுதியதும் இந்த அறையில்தான். Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
காரைக்குடிக்கு வந்த காந்தி, அதற்கு அருகில் இருக்கும் சிராவயலில் தனது பெயரால் இருக்கும் ஆசிரமத்தைப் பார்க்க வந்தார். அது 1927-ம் ஆண்டு. தன்னைத் தேடி காந்தியே வந்துவிட்டதைப் பார்த்து அந்த இளைஞனுக்குப் பரவசம் ஏற்படவில்லை. அதற்குச் சில நாட்களுக்கு முன் சபர்மதி ஆசிரமத்தில் நோயால் துடித்த கன்றுக்குட்டியை ஊசி போட்டுக் கொன்று விடலாம் என்று அனுமதி தந்த காந்தியின் மீது கோபம் கொண்டவனாக அந்த இளைஞன் இருந்தான். காந்தியைப் பார்த்ததும், ‘ஏன் அப்படிச் செய்தீர்கள்?’ என்று அந்த இளைஞன் சண்டை போட்டான். அதே போல்,...
Published 08/29/22
ஐந்தாண்டு காலம் இந்தப் போராளிகள் எப்படி வாழ்ந்தார்கள் என்ற போர்த் தந்திரங்களைக் கவனியுங்கள்! எந்த கெரில்லா போராளியும் பகலில் கிராமத்​துக்குள் தங்கக் கூடாது. தங்கினால் கிராமத்தைச் சுற்றி காவல் ஊழியர்களை நிறுத்த வேண்டும். எதிரி தாக்கினால் ஓடக் கூடாது. ஓடினால், நீங்கள்தான் முக்கியத் தோழர் என்பதை எதிரி தெரிந்துகொள்வான். கூட்டமாக நடந்துபோகக் கூடாது. குழு குழுவாக பிரிந்து நடக்க வேண்டும். பேசிக்கொண்டே நடக்கக் கூடாது. பாடக் கூடாது. இரவில் சிகரெட் பிடிக்கக் கூடாது. எல்லோரும் மாற்றுப் பெயர்கள்...
Published 08/29/22
இந்திய விடுதலையை மிகத் துரிதம் ஆக்க முக்கியமான இரண்டு காரணங்கள் என்ன தெரியுமா? முதலாவது காரணம், இந்தியத் தொழிலாளி வர்க்கம். இரண்டாவது காரணம், இரண்டாம் உலகப் போர். இந்தியப் பாடப் புத்தகங்களால் மட்டுமல்ல, பெரும் பான்மை வரலாற்றுப் புத்தகங்களாலும் மறைக்கப்பட்ட வரலாறு இது. Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
பெரியோர்களே தாய்மார்களே Ep-57 |ஏற்றுமதி வர்த்தகத்தைத் திறம்பட நடத்தியவர்கள் பேரி நிறுவனமும் பின்னி நிறுவனமும். பேரி நிறுவனத்தின் அடையாளமாக ‘பாரீஸ் கார்னர்’ எனப்படும் பாரிமுனையும், பின்னி நிறுவனத்தின் அடையாளமாக பெரம்பூர் பின்னி ஆலை கட்டடமும் இன்னமும் இருக்கின்றன. வேதாளம் படத்தில் அஜித் ஆடும், ‘ஆளும்மா டோலும்மா’ பாட்டு எடுக்கப்பட்டது இந்த பின்னி ஆலையில்தான். Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
முதல் காரணம்: ‘‘எனக்கு உடல்நலம் இல்லை. அதனால், இந்தப் பொறுப்பை ஏற்க இயலாது!” இரண்டாவது காரணம்: ‘‘சுதந்திரத்துக்கு முந்தைய கட்சிபோல் இப்போது காங்கிரஸ் இல்லை. நாட்டு விடுதலையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு எந்தச் சுயநலமும் இல்லாமல் ஒரே குடும்பச் சகோதரர்களாக நாம் போராடினோம். ஆனால், இன்று பதவிக்காக ஒருவரை ஒருவர் வீழ்த்த நினைக்கிறார்கள். போட்டி, பொறாமை அதிகமாகி விட்டது. கோஷ்டி மனப்பான்மை உள்ளவர்கள் அதிகம் இருக்கும், காங்கிரஸ் கட்சியில் என்னால் முதல்வராக நீடிக்க முடியாது. என்னை விட்டுவிடுங்கள்.” -...
Published 08/29/22
மொத்தமே ஒன்றரை ஆண்டு காலம்தான் முதலமைச்சராக இருந்தார். 10 ஆண்டுகளுக்கான சாதனைகளை ஒன்றரை ஆண்டுகளில் செய்து விட்டார். ஓமந்தூராரின் மொத்த சிந்தனையுமே உணவு உற்பத்தியைப் பெருக்குவதில்தான் இருந்தது. ஆற்றுப்பகுதி, ஆறுகள் இல்லாதபகுதி எனப் பிரித்து பயிர் உற்பத்தியைப் பெருக்கத் திட்டங்கள் போட்டார். கிணறுகள் வெட்ட கடன் கொடுத்தது இவர்தான். தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கிணறுகள் இவரது ஆட்சியில் வெட்டப்பட்டன. மாநிலத்தில் அப்போது 10 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் இருந்துள்ளன. எல்லாப் பள்ளிகளிலும்...
Published 08/29/22
இந்தியா விடுதலை பெற்றபோது தமிழகத்தை அதாவது, அன்றைய சென்னை மாகாணத்தை ஓர் இரும்பு மனிதர் ஆட்சி செய்துகொண்டு இருந்தார். அவர் பெயர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணம் காட்டத்தக்க உத்தம மனிதர் ஓமந்தூரார். Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
ஆகஸ்ட் 15 1947-ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பேசிய உரையை நீங்கள் கேட்டதுண்டா ? Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கான போராட்டம் சுதந்திரத்துக்கு முன்பு முதல் இன்று வரை .| பெரியோர்களே தாய்மார்களே 48 Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
பெரியோர்களே தாய்மார்களே Ep-45| தனக்கு முன் உட்கார்ந்து இருந்த இளைஞனைப் பார்த்து, ‘என்ன செஞ்சிட்டு இருக்கீங்க தம்பி’ என்று கேட்டார் தந்தை பெரியார். ‘கல்லூரியில் படிக்கிறேன். பரீட்சை எழுதி இருக்கிறேன்’ என்றான் அந்த இளைஞன். ‘படிப்பு முடிந்ததும் உத்தியோகம் பார்க்கப் போறீங்களா’ என்ற கேள்வியைப் கேட்ட பெரியாரிடம், ‘உத்தியோகம் பார்க்க விருப்பமில்லை’ என்றான் அவன்..யார் இந்த இளைஞன் ?? தெரிந்துகொள்ளுங்கள் ?? Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
பெரியோர்களே தாய்மார்களே Ep-44 | சென்னை சைதாபேட்டையைத் தாண்டுபவர்கள் எம்.சி.ராஜா மாணவர் விடுதியைப் பார்க்காமல் இருக்க முடியாது. ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவிளக்காக அந்த மாணவர் விடுதியை 100 ஆண்டுகளுக்கு முன்பு தனது நண்பர் பழனியப்பனோடு சேர்ந்து தொடங்கியவர் எம்.சி.ராஜா Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
பொது இடத்தில் இளங்கோவன் விஜயதரணி கை பையை இழுக்குமளவிற்கு நட்பாக இருந்தவர்கள் இன்று எதிர்க்கும் அளவிற்கு இருக்கிறார்கள் . சென்னையில் இருந்து டெல்லிக்கு போகும் விமானத்தில் 5 சதவீதம் பேர் இளங்கோவனை புகார் செய்யப்போகிறார்கள். இதை எல்லாம் பார்க்கும் போது குஷ்புவிற்கு அடிக்கடி தலை சுற்றுகிறது.நக்மா வந்த ராசி இது என்று சொல்லி விடமுடியாது. சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும் தமிழக காங்கிரஸ் நிலை என்ன ? தெரிந்துக்கொள்ளுங்கள் .. Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
சத்ய மூர்த்தி பவனை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது . அதற்கு ஏன் அந்த பேர் வந்தது ? யார் அந்த சத்ய மூர்த்தி . Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
பிறந்ததில் இருந்து ஆரோக்கியம் குறைவு, தான் பெற்ற குழந்தைகளுக்கும் ஆரோகியம் சரி இல்லை. இருப்பினும் தான் மேற்கொண்ட லட்சியத்தில் வென்றார் மருத்துவம் பயின்ற முதல் பெண்மணி முத்து லட்சுமி.. maelum தெரிந்துக்கொள்ள Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
அமெரிக்காவில் நீக்ரோக்களுக்கும், பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது. 1850-ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்து பெண்கள் வாக்குரிமை கேட்டுப் போராடினார்கள். இந்தியாவில் என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள்... தி.மு.க தொடங்கப்பட்டபோதே பெரியார் எழுதினார். ‘‘புதிய கம்பெனி திறக்கப்பட்டு விட்டது” என்று. இப்போது இரண்டு கம்பெனிகள். இவர்கள் கம்பெனிகளா... பிரிட்டிஷாரைப்போல இரண்டு கும்பெனிகளா? Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
எது ஆட்சி? ஓர் ஆட்சி, எப்படி இருக்க வேண்டும்? இரட்டையாட்சி முறைப்படி சென்னை மாகாணத்தில் 1920-ல் நடந்த முதல் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்த நீதிக் கட்சி நடத்தியதே, அதுதான் ஆட்சி. மாளிகையில் மன்னன் இருந்தாலும் மண் குடிசையில் மனசு இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர் கையில் ஆட்சி இருந்தால் அந்த ஆட்சி, காசு பார்ப்பதாக மட்டும் இல்லாமல் மக்கள் மாசு துடைப்பதாக அமையும். Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
இந்திமொழி உயர்நிலைப் பள்ளிகளில் 5, 6, 7, படிவங்களில் கட்டாயமாகும் என்று 1937-ல் அறிவிக்கப்பட்டது. அப்போது, சென்னை சைதாப்பேட்டையில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டுக்கு மறைமலை அடிகளே தலைமை தாங்கினார். ‘தமிழர் கழகம்’ உருவாக ஊக்கம் கொடுத்தார். ‘இந்தி பொது மொழியா?’ எனப் புத்தகம் எழுதினார். அதன் பொருட்டு நடந்த மறியலில் மகன் மறைதிருநாவுக்கரசு போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது அவருடைய தாய் தடுத்தார். ‘‘தமிழ் காக்க நாம் அல்லவா சிறை அனுப்ப வேண்டும். வேலை போய்விட்டால் என்ன, வேறு வேலை கிடைக்காமலா போய்விடும்?...
Published 08/29/22
‘‘நாங்கள் உங்கள் பிறந்தநாளைக் கொண்டாடப் போகிறோம்’’ என்று கூட்டமாக வந்து கேட்டவர்களிடம், ‘‘என்னுடைய பிறந்த தேதி எனக்கு நினைவில் இல்லை. எனக்கே நினைவில் இல்லாத நாளை நீங்கள் ஏன் கொண்டாட வேண்டும்?” என்று அந்தத் தலைவர் சொன்னார். சுதந்திரத்துக்காக தங்கள் வாழ்க்கையை இழந்து, ரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி உழைத்த காங்கிரஸ்காரர்களே சுதந்திரத்துக்குப் பிறகு சுரண்டல் ராஜ்யம் தொடங்கியபோது எதிர்ப்புக் குரல் கொடுத்த காங்கிரஸ் தலைவர் அவர். Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
அரசியலில் பட்டம் பதவி பெறுவதற்காக எந்த ஒரு கீழான செயல்களையும் செய்வான் என்று அன்றே சொன்னார் பெரியார் . அந்த தீர்க்கதர்சி கூறியது என்ன ? தெரிந்துக்கொள்ளுங்கள் .. Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
தந்தை பெரியாரின் வளர்ச்சிக்கு துணையாக இருந்தவர்கள் 3 மிகப்பெரிய சாமியார்கள். யார் அந்த சாமியார்கள் ? என்ன செய்தார்கள் ? தெரிந்துக்கொள்ளுங்கள் பெரியோர்களே தாய்மார்களே தொடரில் . Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
தமிழ்நாடிற்கு வெளியே தமிழை கொண்டாடியவர் என்னும் பட்டத்தை மகாத்மா காந்திக்கு தூக்கி குடுக்கலாம் . Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
ஒரு தமிழனுக்காக காந்தி வாதாடியது எதனால் ? தெரிந்துக்கொள்ளுங்கள் | பெரியோர்களே தாய்மார்களே - 33 Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22