மரப்பாச்சி சொன்ன ரகசியம் - யெஸ். பாலபாரதி
Listen now
Description
சாகித்ய அகாடமியின் 2020 ஆம் ஆண்டுக்கான பாலபுரஸ்கார் விருது பெற்ற நாவல். ஆசிரியர் - பாலபாரதி கதை பற்றி - ஷாலினி என்ற சிறுமிக்கு ஒரு மரப்பாச்சி பொம்மை கிடைக்கிறது. ஒருநாள் திடீரென அது பேசவும் ஆடவும் ஓடவும் செய்கிறது. ஷாலினியின் தோழி பூஜா என்பவளுக்கு ஒரு சங்கடம் நேர்கிறது. அதுவும் வெளியில் எல்லோரிடமும் எளிதாகச் சொல்லிவிட முடியாத பிரச்சனை. அவளுக்கு ஷாலுவின் மரப்பாச்சி உதவுகிறது. இது ஏதோ ஒரு பூஜாவின் பிரச்சனை மட்டுமல்ல. நம்மிடையே வெளியே தெரியாமல் பல பூஜாக்கள் உண்டு. அவர்களுக்கு உதவுவதும், தைரியம் கொடுப்பதும் கூட நமது பணிதான். இதை வெறும் கதையாக கடந்து போய் விட வேண்டாம். இது பற்றி உங்கள் அம்மா, அப்பாவிடமும், தோழிகளிடமும் மனம் திறந்து பேசுங்கள். தெளிவு கிடைக்கும் என்று ஆசிரியர் கூறியுள்ளார். முதல் பாகம் மரப்பாச்சி எப்படி ஷாலினிக்கு கிடைத்தது. மரப்பாச்சி எப்படி உயிர் பெற்றது? தொடர்ந்து கேளுங்கள். உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி.
More Episodes
ஆசிரியர் பாவண்ணன் அவர்களின் அனுபவங்கள்
Published 04/18/24
Published 04/18/24
திருட்டுப் போன தன் காளை மாட்டை எப்படிக் கண்டுபிடித்து தன்னிடம் பெற்றான் என்பதுதான் கதை.
Published 04/15/24