Episodes
ஆசிரியர் பாவண்ணன் அவர்களின் அனுபவங்கள்
Published 04/18/24
Published 04/18/24
திருட்டுப் போன தன் காளை மாட்டை எப்படிக் கண்டுபிடித்து தன்னிடம் பெற்றான் என்பதுதான் கதை.
Published 04/15/24
அப்புசாமி சீதாப்பாட்டி கதைகள்
Published 04/15/24
இருட்டில் சாப்பிடாதே! இருட்டில் சாப்பிட்ட அக்காவின் நிலை என்ன என்பதுதான் கதை.
Published 04/07/24
ஆசிரியர் சுஜாதா அவர்களின் மர்மக் கதைகள் படிக்க படிக்க விறு விறுப்பாகவும் அக்கதையின் கதா பாத்திரம் அடுத்து என்ன செய்வார்கள் என்ற ஆவலுடனும் கதையின் முடிவு என்ன ஆகுமோ என்ற திகிலுடனும் இருக்கும். நாமே அக்கதையின் கதா நாயகர்களாகவும் கதா நாயகிகளாகவும் நினைக்கும் அளவுக்கு ஆசிரியரின் கதை நடை அருமையாக இருக்கும். இக்கதையின் முடிவினைப் போலே...😀😊
Published 04/02/24
கதைகள் கூட ஒருவித சாஸ்திரம்தான். அவைகளைப் படிப்பதின் மூலமாக அவைகள் எத்தேசத்தில் வழங்குகின்றனவோ, அத்தேசத்தின் நடை, உடை, பாவனை, நாகரிகம், வித்தை, முதலானவற்றை அக்கதையில் புகுத்தியிருக்கிறார்கள். இக்கதைகளை இன்றைய தலைமுறைக்கு நாம் எடுத்துச் சொல்வதன் மூலம் அவர்களுக்கு தமிழ் இலக்கியத்தினை அறியப்படுத்தலாம்.
Published 03/30/24
கந்தனும் பொன்னனும் இரவு நேரத்தில் கானகத்தில் விளக்கொளி தெரிந்த ஒரு வீட்டில் தங்குவதற்காக அனுமதி பெற்றனர். அங்கே ஒரு முண்டாசு கட்டிய மாட்டு வண்டிக்காரன், அறிவாளி போல் தெரிந்த ஒரு இளைஞனையும் சந்தித்து உரையாட ஆரம்பித்தார்கள்.
Published 02/29/24
கீழே விழுந்த மரப்பாச்சியைப் பார்த்த ஷாலு என் மரப்பாச்சி விழுந்துடுச்சி என்று அழுதாள். சாப்பிடாமல் எனக்கு என் மரப்பாச்சி வேண்டும் என்று அடம் பிடித்ததால் அப்பா தேடி வருவதாக கிளம்பினார். சூர்யா அவளை சமாதானப்படுத்தினான். மரப்பாச்சி எங்கு விழுந்தது? என்ன செய்தது?
Published 02/28/24
பாராகிளைடிங்கில் அனைவரும் பறப்பதைப் பார்த்த ஷாலு தானும் பறக்க ஆசைப்பட்டாள். பாராகிளைடிங்கில் அவளும் பறந்து கொண்டிருந்தபோது அவள் கையில் உள்ள மரப்பாச்சி கைதவறி கீழே விழுந்து விட்டது.
Published 02/28/24
ஏலகிரிக்கு ஷாலு தன் சித்தி குடும்பத்துடன் காரில் பயணம் செய்தனர். ஏலகிரியில் ஓர் விடுதியில் தங்கி சிறுவர் பூங்கா, படகு சவாரி என்று மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர்.
Published 02/28/24
மரப்பாச்சியை ஆசிரியரிடம் இருந்து வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்த ஷாலுவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவளுடைய சித்தி, சித்தப்பா மற்றும் சூர்யா வந்திருந்தனர் ஏலகிரி போவதற்காக. சூர்யாவிடம் மரப்பாச்சி பற்றிய உண்மையை ஷாலு அவனிடம் சொல்ல நம்ப முடியாமல் அதிர்ந்தான் அவன்.
Published 02/20/24
ஒன்பதாவது பாகம் - மரப்பாச்சியின் நடவடிக்கைகள் பற்றி நேத்ராவிற்கு மிகவும் குழப்பமாக இருந்தது. மற்ற தோழிகள் யாரும் அவள் சொல்வதை நம்பவில்லை. வகுப்பறையில் மரப்பாச்சி அனைவரிடமும் கைமாற சத்தம் கேட்டு ஆசிரியர் அதை வாங்கி வைத்துக் கொண்டார். ஷாலுவிற்கு வருத்தமாகி விட்டது.
Published 02/20/24
எட்டாவது பாகம் - மரப்பாச்சியுடன் பேசிக் கொண்டிருந்த பூஜா மற்றும் ஷாலுவைப் பார்த்த நேத்ரா அவர்களிடம் இருந்து மரப்பாச்சியை பிடுங்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தாள்.
Published 02/17/24
ஏழாவது பாகம் - மரப்பாச்சி தாத்தாவிற்கு சரியான தண்டனை வழங்கி அவரை மருத்துவமனைக்கு அனுப்பியது.
Published 02/17/24
ஆறாவது பாகம் - பூஜா தன் அப்பா அம்மாவிடம் நடந்தது அனைத்தையும் கூற அவளது பெற்றோர்கள் என்ன செய்தார்கள்?
Published 02/13/24
ஐந்தாம் பாகம் - பூஜா மரப்பாச்சி பேசுவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தாள். பூஜாவுக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் தாத்தா தனக்கு செய்யும் செயல்களே என்று ஷாலுவிடமும் மரப்பாச்சியிடமும் பூஜா சொல்கிறாள். மரப்பாச்சி என்ன தீர்வு பூஜாவிடம் சொன்னது?
Published 02/13/24
நான்காம் பாகம் - ஷாலு பூஜாவின் வருத்த்திற்கு என்ன காரணம் என்று அறிய முற்படுகிறாள். அவளுடைய வீட்டுக்கு பூஜாவை அழைத்துச் சென்று மரப்பாச்சியை அவளிடம் அறிமுகப்படுத்துகிறாள்.
Published 02/08/24
மூன்றாம் பாகம் - ஷாலு நடன வகுப்புக்கு மரப்பாச்சியுடன் சென்றாள். அங்கு பூஜா வருத்தத்தோடு நடனம் ஆடாமல் வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.
Published 02/07/24
சாகித்ய அகாடமியின் 2020 ஆம் ஆண்டுக்கான பாலபுரஸ்கார் விருது பெற்ற நாவல். ஆசிரியர் - பாலபாரதி கதை பற்றி - ஷாலினி என்ற சிறுமிக்கு ஒரு மரப்பாச்சி பொம்மை கிடைக்கிறது. ஒருநாள் திடீரென அது பேசவும் ஆடவும் ஓடவும் செய்கிறது. ஷாலினியின் தோழி பூஜா என்பவளுக்கு ஒரு சங்கடம் நேர்கிறது. அதுவும் வெளியில் எல்லோரிடமும் எளிதாகச் சொல்லிவிட முடியாத பிரச்சனை. அவளுக்கு ஷாலுவின் மரப்பாச்சி உதவுகிறது. இது ஏதோ ஒரு பூஜாவின் பிரச்சனை மட்டுமல்ல. நம்மிடையே வெளியே தெரியாமல் பல பூஜாக்கள் உண்டு. அவர்களுக்கு உதவுவதும், தைரியம்...
Published 02/01/24
கதை ஆசிரியர் ஒரு சிறு கதை வழியாக ஏழ்மை எவ்வளவு கொடியது என்பதை தன் கதை எழுத்தின் மூலம் நம் மனதில் ஆணி அடித்தாற் போல செதுக்கி விட்டுப் போய்விட்டார். ஆனால் அதிலிருந்து வருகின்ற இரத்தமும் வலியும் நிற்காது மனதை பிசைகின்றது. ஒரு நெருடலும் குற்ற உணர்ச்சியும் கூட சிறிதாக எட்டிப்பார்ப்பது இந்தக் கதையை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
Published 12/04/23
ஆசிரியர் சுஜாதா அவர்கள் எழுதிய மர்மக் கதைகளில் ஒன்று இந்த சிறுகதை...
Published 11/14/23
நகரத்தின் மனசாட்சி
Published 10/31/23
திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோவிலின் தல வரலாறு மற்றும் பெரியானை கணபதியின் மேல் அவ்வைப் பாட்டி கொண்ட பற்றினால் விநாயகர் காட்டிய கருணை பற்றியும், புகழ் வாய்ந்த பாரி மற்றும் கபிலரின் பெருமைக்கும் இந்த ஊருக்கும் உள்ள தொடர்பு பற்றியதுமான தகவல்கள் கொண்ட பதிவு...
Published 09/28/23
சாகித்திய அகாதமி விருது பெற்ற கி.ரா. என்ற கி.ராஜநாரயணன் எழுதிய இக்கதை குறும் படமாகவும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. மனிதர்களின் சமூகநோக்கும் மானுடவியலும் புலப்படுத்தப்படுகிறது. சில கதைகள் மட்டுமே மனதில் நின்று எப்போது நினைத்தாலும் ஒரு வலியை ஏற்படுத்தும். அதில் இக்கதை ஒரு பெரும் மன பாரத்தை மனதில் தங்க வைத்து விடுகிறது.
Published 09/13/23